Saturday, July 17, 2010

Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...

இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத்தில் என்ன படம் இருந்தாலும் இதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது...
இதை மெமெண்டோ பத்தின போஸ்ட்ல சொல்லியிருந்தேன்... அதைக் கொஞ்சம் மாத்திக்குங்க... மெமெண்டோவை அலேக்காக தூக்கி ரெண்டாவ்து இடத்துக்குப் போட ஒரு படம் வந்தாச்சு... படம் பார்த்தவங்களுக்கு எல்லாம் ஃபோன் பண்ணி மூணு மணி நேரம் விவாதிச்சு, இன்னும் ஆச்சரியத்துல பேயடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கேன்... அப்படி ஒரு படம்...

அரை மணி நேரம் உட்கார்ந்து கதை எழுதிட்டு, அதை 10 வருஷமா கிராஃபிக்ஸ் பண்ணற அவதார் மாதிரி படங்களுக்கு நடுவுல, 10 வருஷமா யோசிச்சு ஒரு கதை ரெடி பண்ணி இருக்காரு நோலன்... அந்த உழைப்பு ஒவ்வொரு வசனத்திலும் தெரியுது... மேட்ரிக்ஸ் கான்செப்ட் சூப்பர் மேட்ரிக்ஸ் கான்செப்ட் சூப்பர்-னு பத்து வருஷமா சொல்லிகிட்டு இருந்தோமே... அதெல்லாம் இனி சும்மா... மெமெண்டோவுல ஞாபகங்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ணினவரு, இதுல கனவுலகத்தைப் பத்தி Ph.D. பண்ணற அளவுக்கு கான்செப்ட் சொல்லி இருக்காரு...
அது என்னான்னா... ஒரு கனவுலகத்தை கம்யூட்டர்லேயே டிஸைன் பண்ணிட்டு, உங்களுக்கு மயக்க மருந்து குடுத்து தூங்க வச்சுட்டு, உங்களை அந்த கனவுலகத்துக்கு ஒயர் வச்சு கனெக்ட் பண்ணிகிட்டு, நம்ம ஹீரோவும் (டி காப்ரியோ) அதே கனவுலகத்துக்கு வந்துடுவாரு... கனவுலயே உங்ககிட்ட இருந்து ஒரு ரகசியத்தை தெரிஞ்சுகிட்டு, சத்தமில்லாம கனவை முடிச்சுகிட்டு போயிடுவாங்க... உங்ககிட்டயோ, என்கிட்டயோ ரகசியம் தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதில்லை... அதுவே பெரிய பிசினஸ்மேன்கிட்ட இருந்து அவங்களோட ப்ளான் எல்லாம் கறந்துட்டா?? அந்த ஐடியா திருட்டு வேலைதான் ஹீரோவோட தொழில்...
ஆனா, ஏதோ ஒரு காரணத்துக்காக அமெரிக்க அரசாங்கம் அவரைத் தேடிகிட்டு இருக்கு... அதுனால அமெரிக்காவுல இருந்து தப்பிக்கறவர், திரும்ப அங்க போகவேமுடியாது.. அங்க போகணும்னு அவருக்கு ஆசை... ஏன்னா, அமெரிக்காவுலதான் அவரோட ரெண்டு சின்ன குழந்தைகள் பாட்டியோட தங்கி இருக்காங்க... பாட்டியோடவா? அப்ப மனைவி? அவங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க... ஏன்? சொல்றேன்... சொல்றேன்... அந்த தற்கொலைக்கு காரணம் இவர்தான்னு நினைச்சு அமெரிக்க அரசாங்கம் இவரைத் தேடுது... 


உலகின் பெரும்பணக்காரர் ஒருத்தர் ஹீரோவுக்கு ஒரு வேலை தர்றாரு... அந்த வேலையை முடிச்சுத் தந்தா, ஹீரோ அமெரிக்கா போறதுக்கு அவரு வழிபண்ணறேன்னு சொல்லறாரு... என்ன வேலை பண்ணணும்னா, அவரோட போட்டி போடற இன்னொரு பணக்காரரோட (Fischer) கனவுல போயி, அவர் மனசுல ஒரு ஐடியாவை பதிச்சுட்டு வந்தா, போட்டிக்காரனோட பிசினஸ் காலியாயிடும்... இதுக்காக, ஹீரோவும் அவரோட அஞ்சு ஆட்களும் 10 மணி நேரம் Fischer–ரோட விமானத்துல போயி, அவருக்கு மயக்க மருந்து குடுத்து கனவுல இறங்குறாங்க... அதுல அவர் மனசை மாத்தறது அவ்வளவு சுலபமில்ல... அது கனவுன்னு அவருக்குத் தெரியாம இருக்கறதுக்காக, கனவுக்குள்ள இன்னொரு கனவு, அதுக்குள்ள இன்னொரு கனவுன்னு மூணு கனவுலகங்கள் ஒரே நேரத்துல... சிலர் ஒன்னுல தூங்கறாங்க... அதே நேரத்துல இன்னொன்னுல சண்டை போடறாங்க... இன்னொன்னுல அடிபட்டு சாகறாங்க... ஒன்னு கார்ல, ஒன்னு ஹோட்டல்ல, இன்னொன்னு பனிமலையிலன்னு எல்லாம் மாத்தி மாத்தி வருது...

ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு ஆளுடையது... அவங்க விருப்பப்படி பல விஷயங்கள் அதுல நடக்கும்... கனவுல இருக்கப்போ எழுப்பிட்டா, கனவு கலைஞ்சு எல்லாம் பாழயிடும்.. அதுக்காக மயக்க மருந்து போடறாங்க... உலுக்கி எழுப்ப ஒரு டெக்னிக் வச்சுருக்காங்க... திடீர்னு கனவுல கீழே விழற மாதிரி இருந்து முழிச்சுடுவோமே... அப்படி...
நாம தூங்கறப்போ அலாரம் அடிச்சாலும், அது கனவுல நமக்கு ஸ்கூல் பெல் மாதிரி கேக்குமே... அதுமாதிரி, ஒரு கனவுல கீழே விழுந்தா, அது இன்னொன்னுல ஈர்ப்பு சக்தி குறைவான மாதிரி தெரியுது... ஒன்னுல பாம் வெடிச்சா, அது இன்னொன்னுல பனிப்புயலா உணரப்படுது...

கனவுல இருந்து வெளியே வரணும்னா, ஒன்னு யாரவது தூக்கத்துல இருந்து எழுப்பணும், இல்லைன்னா கனவுல நாம சாகணும்... அப்பதான் அதிர்ச்சியில முழிப்பு வரும்... அதுக்காக கனவுல இருந்து வெளியே வரணும்னா, தற்கொலை பண்ணிக்கறாங்க...!!

சரி... கனவெது நிஜமெதுன்னு எப்படி தெரியும்? கனவுல இருக்க வரைக்கும் அது உண்மை மாதிரிதானே தெரியும்... அதுக்காக ஒவ்வொருத்தரும் ஒரு பொம்மை, பம்பரம் இப்படி ஏதாவது ஒன்னு வச்சுருக்காங்க... ஹீரோ அந்த பம்பரத்தை உருட்டி விட்டா நிஜ உலகத்துல சில நொடிகள் சுத்திட்டு நின்னுடும்... அதுவே கனவுன்னா, ரொம்ப நேரம் சுத்தவோ, சுத்திட்டே இருக்கவோ வாய்ப்பு இருக்கு... அதை வச்சுதான் எது கனவு, எது நிஜம்னு கண்டுபிடிக்கறாரு.. இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட டெக்னிக்...

இன்னொன்னு கவனிச்சு இருக்கீங்களா? பத்து நிமிஷம் தூங்கினாலும், கனவுல ரெண்டு மணி நேரம் இருந்தா மாதிரி இருக்கும்... ஏன்னா கொஞ்ச நேர கனவுலயே, நாம ரொம்ப வேகமா பல விஷயங்களை யோசிக்கறோம்.. அதுனால நமக்கு ரொம்ப நேரம் கனவுல இருந்த மாதிரி தோணுது... அதுவே கனவுக்குள்ள கனவுன்னு, மூணு நாலு கனவு உள்ள போயிட்டா, பத்து நிமிஷ தூக்கம், முதல் கனவுல ஒரு மணி நேரமாவும், அதுக்குள்ள வர்ற ரெண்டாவது கனவுல சில நாட்களாவும், மூணாவது கனவுல சில வருஷமாவும் இருக்க மாதிரி தோணும்...

கனவுல செத்துப்போயி, ஆனா நிஜத்துல மயக்கத்துல இருந்தா, எங்க போறதுன்னே தெரியாம, ஒரு விசித்திரமான கனவுலகத்துல பல வருஷங்கள் இருக்க வேண்டியிருக்கும்... (அதாவது நிஜத்துல சில நிமிஷங்களே, கனவுல சில வருஷங்கள் மாதிரி தோணும்...) முன்னாடி ஒரு தடவை அப்படி மாட்டிகிட்ட ஹீரோவும் அவர் மனைவியும், 50 வருஷம் கனவுலயே வாழ்ந்து இருக்காங்க...!! அதுல இருந்து வெளியே வர கனவுல தற்கொலையும் பண்ணிக்கறாங்க... ஆனா, நிஜ உலகத்துக்கு வந்தும், அதுவும் கனவா இருக்கலாம்னு நினைக்கிற மனைவி, அதுலேயும் தற்கொலை பண்ணிக்கறாங்க...!! செத்துப்போன மனைவியோட ஞாபகமாகவும், அதுக்கு தான்தான் காரணம்னு ஒரு குற்ற உணர்ச்சியோடயும் அலையறாரு ஹீரோ... அவர் கனவுலத்துல சீரியஸான வேலை பார்த்துகிட்டு இருக்கப்போ, அவர் மனைவி வந்து காரியத்தை கெடுத்துடறாங்க... அவங்கதான் செத்துட்டாங்களே?? அப்பறம் எப்படி கனவுலகத்துக்கு வரமுடியும்..? அதாவது, அவர் மனைவியோட ஞாபகம் வந்து அவரை திசை திருப்பறதா அவரே நினைச்சுக்கறாரு... (இருக்குற குழப்பம் பத்தாதுன்னு, ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி ரேஞ்சுக்கு இது வேற...) அவர் மனைவியோட ஞாபகங்கள்தான் கிட்டத்தட்ட வில்லன் மாதிரி... அதாவது, அவர் மனைவியின் ஞாப்கத்துக்கு ஒரு சீக்ரெட் தெரியக்கூடாதுன்னா, அதை ஹீரோவுக்கே தெரியாம வச்சுருக்கணும்...!!
இதுவரைக்கும் கான்செப்ட் மட்டும்தாங்க சொல்லியிருக்கேன்... கதை இன்னும் நிறைய இருக்கு... அதெல்லாம் நீங்களே பாருங்க... ரெண்டரை மணி நேரம் போறதே தெரியலை... காலி பாப்கார்ன் பாக்கெட்டை கீழே வைக்கிறதுக்கு கூட கவனத்தை திருப்பமுடியலை... அவ்வளவு வேகம், விறுவிறுப்பு... ஆறு நாடுல படமெடுத்தாங்க, படம் முழுக்க ஆக்‌ஷன்தான், இசை பரபரன்னு இருக்கு, டி காப்ரியோ பின்னியிருக்காரு, ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு அப்படின்னு எல்லாம் ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கு... அதெல்லாம் சொல்லணும்னா மெமெண்டோ மாதிரி பொறுமையா தொடர்பதிவு எழுதணும்...

அந்த பணக்காரனோட மனசுல ஒரு ஐடியாவை பதிக்கணும்ன் சொல்லி, கடைசில படம் முடியும்போது நம்ம மனசுலேயே ஒரு ஐடியாவை பதிச்சுட்டு போயிடறாங்க... ஹீரோ அந்த பணக்காரன்கிட்ட பண்ணற “இன்செப்ஷன்திட்டம் மாதிரி, இந்த படமே நோலன் நம்மகிட்ட பண்ணற இன்செப்ஷன்-ன்னு தோணுது...

சிக்ஸ்த் சென்ஸ் ரேஞ்சுக்கு ஒரு க்ளைமாக்ஸை எல்லாம் அலட்டாம சாதாரணமா சொல்லிட்டுப் போயிருக்காங்க... படம் முடியறப்போ, தியேட்டர்ல “ஹோ....அப்படின்னு ஒரு ஆச்சர்ய சத்தத்தை இப்பதான் முதல் முறையா கேக்கறேன்... ஆனா ஒன்னு, அந்த க்ளைமாக்ஸை சீரியஸா எடுத்துகிட்டு ரொம்ப யோசிச்சு யாரும் தற்கொலை பண்ணிகிட்டா, அதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை...

இயக்குனர் நோலன்... குப்ரிக்கோட புதுமையையும், ஸ்பீல்பெர்க்கின் வியாபார திறமையையும் கலந்துகட்டி 32 அடி பாயறாரு... Capra, Kubrick, Coppola மாதிரி இயக்குனர்களும், Casablanca, Vertigo, 2001 Space Odyssey, Shining மாதிரி படங்களும் முதல்ல பல வருஷங்கள் யாருமே கண்டுக்காம இருந்து, நாளாக ஆக, இப்பதான் தலையில தூக்கி வச்சு கொண்டாடறாங்க... அதுமாதிரி இன்னும் 50 வருஷம் ஆனாலும், இந்தப்படம் சினிமா வரலாற்றின் முக்கிய படமாக இருக்கும்... இது இன்னுமொரு கமர்ஷியல் ஆக்‌ஷன் குப்பையில்லை... புத்திசாலித்தனமான சினிமாவின் உச்சகட்டம்...




Related Posts with Thumbnails

99 comments:

  1. மீ த பர்ஸ்ட்

    ReplyDelete
  2. அய்யோவ். எப்படியா அந்த ஆளு இப்படில்லாம் யோசிக்கிறான்.

    ReplyDelete
  3. பார்த்தா புரியுமா :)

    ReplyDelete
  4. நீங்க ரொம்ப நல்லவருங்க. இதுக்கும் நல்ல விளக்கமா ஒரு பதிவ போடுங்க.

    ReplyDelete
  5. அப்படினாத்தான் பார்க்க முடியும்

    ReplyDelete
  6. ஆகா நாந்தான் மொத பைவுமா. இதுவும் போட்டதால நாந்தான் சிக்த்துமா :)

    ReplyDelete
  7. சிக்ஸர் அடித்த அண்ணன் ராமசாமி வாழ்க...
    படம் பார்த்தா கண்டிப்பா புரியும்ங்க... ஏன்னா மெமெண்டோ மாதிரி கம்மி பட்ஜெட் படம் இல்ல... 160 மில்லியன் டாலர் கொட்டி இருக்காங்க... நாலு பேருக்கு புரிஞ்சாதானே காசு வரும்...

    ReplyDelete
  8. நானும் பார்த்தேன் ஓகேதான்... இப்பதான் விமர்சனம் போட்டேன்...ஆனா ஜெய் நல்லா ரசிச்சி எழுதி இருக்க...

    ReplyDelete
  9. தலைவரே மிகவும் சிறப்பான விமர்சனம்.. உங்கள் விமர்சனம் படத்தை நான் சீக்கிரம் புரிந்து கொள்ள உதவும்.. மிக்க நன்றி .. திங்கள் அன்றுதான் பார்க்கவேண்டும்..

    ReplyDelete
  10. I booked the ticket for tomorrow morning.. but can't wait after reading your post.... i just wanna see now..... :(

    Any how thanks for the post.. Will try to share the experience after watching the movie..

    ReplyDelete
  11. தல கதையை பத்தி படிக்கும் போதே தலையை சுத்துது ...நல்ல எழுதிருக்கீங்க . கட்டாயம் பார்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  12. இந்த வருடத்தில் மிக மிக அதிக எதிர்பார்ப்போடு காத்திருந்த படம்.. இன்னைக்கு பார்த்துட்டு வந்து சொல்றேன்..

    ReplyDelete
  13. நீங்க சொல்றதப் பாத்தா டிவிடி வந்தப்பறம் தான் பாக்கணும்போலயே.

    தியேட்டர்ல பாஸ் பண்ணி, ரீவைண்ட் பண்ணி பாக்க முடியாதே?

    ReplyDelete
  14. படம் விறு விறுன்னு போகுதோ இல்லையோ உங்கள் விமர்சன நடை செம விறு விருப்புங்க....

    பார்க்க பார்கிறேன்

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  15. படிக்கிறப்பவே கண்ண கட்டிக்கிட்டு வருதே..:)

    ReplyDelete
  16. நல்ல விவரிப்பு. அவ்ளோ நல்லாவா இருக்கு. தேளும் இன்னிக்கு பாத்துட்டு சொல்றேன்னாரு. பாத்துற வேண்டிதான்.

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம் தல
    படம் பாக்கனும் :-))

    ReplyDelete
  18. :)

    பார்த்துடலாம்.

    ReplyDelete
  19. விமர்சனம் அருமை...

    நிச்சயம் பார்க்க வேண்டும்... :-)

    ReplyDelete
  20. தலைவரே மிகவும் சிறப்பான விமர்சனம்..

    படம் பாக்கனும் :-))

    ReplyDelete
  21. படிக்கும்போது ரெண்டு டீ யை உள்ள தள்ளிக்கிட்டு படிக்கவேண்டியிருக்கு.... இதுல படத்தையும் பாரத்தா... இருந்தாலும் பார்த்துடுவோம். தல...

    ஆமா நீங்க பதிவுவோட்டது கனவுலகத்திலேய நிஜவுலகத்துலயா.... தி மார்ஸ் படம் வந்த புதுசுல படத்தை பார்த்து வெளில வந்தா மனுசங்க கூட ஏலியன்ஸ் மாதிரி தெரிஞ்சுது...அதான் கேட்டேன்...

    ReplyDelete
  22. படம் நல்லா இருக்குன்னு தான் எல்லோரும் சொல்றாங்க.imdb ல rating 9.6..
    இது ஆரம்ப rating தான்.கொஞ்ச நாள்ல குறைஞ்சுடும்.ஆனாலும்,ஒரு எதிர்பார்ப்ப உண்டாக்கி இருக்கு.

    ReplyDelete
  23. yov nethu fulla engaiyaa pona? online laye illai. enakku rendu ticket kettirunthene? ennaachu? :-)number-i mail pannunga jai, have to speak with you.

    ReplyDelete
  24. நன்றி ஜாக்கி... உங்க போஸ்ட்ல, கதையை நச்சுனு விவரிச்சு இருந்தீங்க... சூப்பர்...

    நன்றி கே.ஆர்.பி.செந்தில், பூமி, டம்பி மேவீ, Saravana Kumar MSK...
    படம் பார்த்துட்டு சொல்லுங்க...

    நன்றி முகிலன்... டிவிடில பார்த்தா ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்... நல்லா புரியும்தான்.. ஆனா, தியேட்டர்ல பாக்கறது ஒரு தனி அனுபவம்... இதைப் பாக்கலைன்னா வேற எந்த படத்தை தியேட்டர்ல பாக்கப் போறீங்க?

    நன்றி இளமுருகன்.

    நன்றி வினோத்கெளதம்... கண்ணக் கட்டிகிட்டு வந்தாலும், அது ஒரு ஜாலிதான்... அனுபவிச்சு பாருங்க...

    நன்றி மயில், கார்த்திக், சென்ஷி, அகல்விளக்கு, வெறும்பய...
    கண்டிப்பா படம் பாருங்க...

    @நாஞ்சில்,
    // இருந்தாலும் பார்த்துடுவோம் //
    அங்கதான் நிக்கறீங்க... கண்டிப்பா பாருங்க... அதெப்படி நமக்கு புரியாம ஒரு படம் இருக்கலாம்??

    // ஆமா நீங்க பதிவுவோட்டது கனவுலகத்திலேய நிஜவுலகத்துலயா.? //
    இதுக்கு பதில் நோலனாலயும் சொல்ல முடியாதுங்க... செத்துபோனப்பறம், எங்கயாச்சும் வேற உலகத்துல தூங்கி எழுந்தா, இந்த வாழ்க்கையே கனவுதான்... ஆனா, அந்த எழுந்திருக்கிற உலகமும் இன்னொரு கனவா இருக்கலாம்... எல்லாமே ஒரு indefinite recursive loop-ஆ இருக்கலாம்... நாம வேணா செத்து செத்து விளையாடி கண்டுபிடிக்கலாம்.. வர்றீங்களா? :))

    @ இலுமி,
    // imdb ல rating 9.6.. இது ஆரம்ப rating தான்.கொஞ்ச நாள்ல குறைஞ்சுடும்.//
    ஏற்கனவே குறைஞ்சுடுச்சு தல... 9.3 இப்ப... ரெகுலர் யூசர் ரேட்டிங் 8.3... ரேங்க் #83... எல்லாருக்கும் முழுசா புரியாதுங்கறதால ரேட்டிங் ரொம்ப எதிர்பார்க்க முடியாதுதான்...

    @ முரளி,
    ஐய்யய்யோ... மன்னிச்சுடுங்க தல... போன வாரமே ஞாபகப்படுத்தி இருக்கக்கூடாது....? மூணு வாரமா செம வேலை... ஒரு போஸ்ட்டும் போடல... கமெண்ட் கூட போட முடியல... படிக்கவும், வோட் போடவுமே ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தரம்தான் பண்ணமுடிஞ்சது... மறந்துட்டேங்க... எங்க இருக்கீங்க? நம்பர் மெயில் பண்ணி இருக்கேன்... வாங்க... இன்னொரு தடவை பார்க்கலாம்... பிரச்சினையே இல்லை... :)

    ReplyDelete
  25. வாவ்.. வாவ்... வாவ்.. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு படத்திற்கு என்ன ஒரு தெளிவான விமர்சனம்.. ஹாட்ஸ் ஆஃப் ஜெய்.. கலக்கிட்டீங்க. மெமோண்டோ படத்தையோ தூக்கி சாப்பிடுதுன்னா இதுக்கு அவங்க எவ்ளோ உழைச்சி இருக்கணும். கேட்கும் போதே அவர் மேல மரியாதை ராக்கெட் வேகத்துல ஏறுது.. கண்டிப்பா பார்க்கணும். ஏற்கனவே நீங்க இந்தப்படத்தை பத்தி சொல்லி டெம்ப் ஏத்தி விட்டிருந்தீங்க.. இன்னைக்கு என்னடான்னா........


    கண்டிப்பா நீங்க இந்தப்படத்தைப்பத்தி தொடர்பதிவு எழுதுவீங்கன்னு நினைக்குறேன். Honestly Speaking.... நீங்க சொல்லும் போதுதான் நிறைய விஷயம் தெரிஞ்சுக்க முடியுது.. படம் பார்த்தாக்கூட என்னால அவ்ளோ விஷயத்தை புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியலை. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. உலகின் மிக மிக முக்கியமான படங்கள்'ல இதுவும் ஒண்ணு.... சூப்பர் ஜெய்..

    ReplyDelete
  26. அபாரம்.. கேக்கவே மகிழ்ச்சியா இருக்கு :)

    இவ்வளவு நாள் ஏங்க போயடீங்கன்னு இனிக்கி பின்னூட்டம் போடலாம்னு தான் இருந்தேன்.. அதுக்குள்ள வந்துட்டீங்க :) இந்த படத்த பத்தி எழுதுவீங்கன்னு ஒரு கணிப்பு இருந்தது. சூப்பர்ப்.. :)

    ReplyDelete
  27. நண்பரே,

    திரைப்படம் உங்களை பிரம்மிக்கவைத்துவிட்டது என்பதனை உங்கள் பதிவில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறப்பான பதிவு நண்பரே.

    ReplyDelete
  28. பார்த்துட்டேன் நான் பார்த்துட்டேன்..

    http://msk-cinema.blogspot.com/2010/07/inception-2010-christopher-nolan.html

    :)

    ReplyDelete
  29. தல ,
    inception கத ன்னு நீங்க சொன்னதுல நிறைய பிழை உள்ளது. கொஞ்சம் பொறுப்பா பதிவ போடுங்க.

    ReplyDelete
  30. இப்பதான் படம் பார்த்துப்புட்டு வீட்டுக்குள்ள நுழையறோம் ;-) . . என்னால் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. ஹாலிவுட் சினிமா வரலாற்றில், இதுவரை வந்த அத்தனை படங்களையும் மிஞ்சிய படம் இது.. ஒரே வார்த்தை - அட்டகாசம் !

    ReplyDelete
  31. YOUR REVIEW IS SO SUPERB...

    KEEP IT UP..

    MANO

    ReplyDelete
  32. நன்றி கவிதைகளின் காதலன், பிரசன்னா...
    கொஞ்ச நாளா ஆஃபீஸ் வேலை அதிகம்... அதான் அதிகம் எழுத முடியல...

    நன்றி கனவுகளின் காதலன்..

    நன்றி MSK.. உங்க போஸ்ட்டும் சூப்பர்...

    @ அஹோரி,
    ஹா ஹா... முதல் தடவையே எல்லாமே சரியா புரிஞ்சுட்டா அப்பறம் நோலன் எதுக்கு? :) கடந்த 5 வருஷத்துல ஏகப்பட்ட தடவை மெமெண்டோ பார்த்தும், நிறைய பேரோட டிஸ்கஸ் பண்ணியும் நான் மெமெண்டோ பகுதி-3ல் எழுதியிருந்த சில க்ளுக்கள் தெரியவேயில்லை... சமீபத்துல பார்த்தப்போ அந்த க்ளூ எல்லாம் புரிஞ்சு கதையே மொத்தமா வேற அர்த்தத்துல மாறி இருந்தது... அதுனாலதான் அதுல Disclaimer போட்டேன்.. இதுலயும் ஏதாவது தப்பு இருக்கலாம்... தெரிஞ்சா சொல்லுங்க மாத்திக்கலாம்னு... அந்த disclaimer எல்லா நோலன் படங்களுக்கும் பொருந்தும்... ஏன்னா இதெல்லாம் பார்க்கப் பார்க்க வேற மாதிரி புரியும்...

    எனக்குத்தெரிஞ்சவரை,
    // ஆனா, இது அரசாங்கத்துக்கு தெரிஞ்சு, அவரை கைது செய்ய சொல்லிடறாங்க... //
    இது டைரக்டா எஙகேயும் சொல்லப்படலை... அவர் மனைவியை அவர்தான் கொன்னதா போலீஸ் நினைக்கிறதா சொல்லறாரு ஹீரோ...

    அப்பறம், அவங்க 50 வருஷம் வாழற அந்த நாலாவது கனவைப் பத்தியும், limbo பத்தியும் நான் அதிகம் சொல்லலை.. முழுக்கதை எழுத நேரமும் இல்லை.. இன்னும் முழு புரிதலும் இல்லை...

    வேற ஏதாச்சும் தப்பா இருந்தா சொல்லுங்க.. கண்டிப்பா மாத்திடலாம்... இது ஒரு டிஸ்கஷன் அறைதான்...


    @ கருந்தேள்,
    // என்னால் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. ஹாலிவுட் சினிமா வரலாற்றில், இதுவரை வந்த அத்தனை படங்களையும் மிஞ்சிய படம் இது.. ஒரே வார்த்தை - அட்டகாசம் //
    ஹா ஹா... இப்படிதான் நானும் இருந்தேன் நேத்து... இப்பவரைக்கும் மலைப்பாதான் இருக்கு... அப்படியே சூடா ஒரு போஸ்ட் போட்டுருங்க... இன்னொரு தடவை பார்க்கணும்னா கால் பண்ணுங்க... போகலாம்...

    @ MANO,
    நன்றி...

    @ thenammailakshmanan,
    நன்றி...

    ReplyDelete
  33. உங்க விமர்சனம் படிச்சாலே.. நிச்சயம் படம் பார்த்தே ஆகவேண்டும் என்று எண்ணம் வருகிறது. அருமையான அலசல்.

    ReplyDelete
  34. படம் பார்த்தேன். ஜெய்.. மீண்டும் ஒரு முறை ரசித்து பார்த்துவிட்டு எழுதலாம் என்றிருக்கிறேன். உங்கள் விமர்சனம் அருமை.

    ReplyDelete
  35. ஜெய்.. உங்கள் விமர்சனம் இப்பவே படத்தை போய் பார்க்க வேண்டும் என தூண்டுகிறது.. அருமையான நடை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. உங்க profile போட்டோ ரொம்ப நல்லாயிருக்கு.கோட்சூட்ல ரொம்ப அழகா இருக்கீங்க.









    இப்படி எழுதிட்டு, இங்கிலீஷ் படத்த பத்தி பின்னூட்டம் போட்டா, உங்களுக்கு கோபமாத்தான் வரும் :).

    நோலன் - இவரு Born Genius ங்க. இல்லைன்னா இப்படி எல்லாம் யோசிக்கக்கூட முடியாது. ஆனா ஒண்ணு கவனிச்சிங்களா ?. அவர் படத்தின் கரு ரொம்ப, பாமரர்களையும் கவரும் வகையில் இருக்கும். Momento - பழிவாங்குதல். The Prestige - இரண்டு மேஜிக் நிபுணர்களுக்கு இடையிலான போட்டி. மேஜிக் பிடிக்காதவர்கள் யார். இந்தப் படத்தில் கனவு. உலகில் மிகவும் கடினமான விஷயம் மூளை. அதைவிட கடினம் - கனவு.

    இந்த மாதிரி கருவ வெச்சுக்கிட்டு, திரைக்கதையில சுத்தி.. சுத்தி அடிக்குறது இவரு ஸ்டைலு.

    ரொம்ப சின்ன வயசான இவர், இன்னும் நிறைய படங்களை டைரக்ட் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் அவருக்கு.

    கொஞ்சம் படித்த உடன், எங்கே முழுக் கதையும் சொல்லிடப் போறீங்களோன்னு பயந்தேன். ஆன, ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. சூப்பர் விமர்சனம்.

    ReplyDelete
  37. நன்றி பிரவீன்.

    நன்றி கேபிள்ஜி, உங்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்..

    நன்றி சுகுமார்...

    நன்றி பின்னோக்கி...
    // கோட்சூட்ல ரொம்ப அழகா இருக்கீங்க. //
    எப்பவுமே நான் அழகுதாங்க... :P
    // அவர் படத்தின் கரு ரொம்ப, பாமரர்களையும் கவரும் வகையில் இருக்கும். //
    ஆமா.. அது மட்டும் இல்ல.. பல விஷயங்கள்ல ஸ்டைல் இருக்கு... ஹீரோவுக்குள்ள எப்ப்வுமே ஒரு கெட்ட மிருகம் இருக்கும்... யாரவது வேண்டியவங்க செத்து போயிருப்பாங்க.. அதுல ஒரு சோகம் இருக்கும்... அதுதான் மொத்த படத்தின் அடிப்படையா இருக்கும்...

    // கொஞ்சம் படித்த உடன், எங்கே முழுக் கதையும் சொல்லிடப் போறீங்களோன்னு பயந்தேன். //
    ஆங்... அது மட்டும் பண்ணமாட்டேன்... அப்படி எழுதினா, பெருசா சிவப்புல எச்சரிக்கை எழுதிடுவேன்...

    ReplyDelete
  38. இந்த படத்தை புரிஞ்சிக்க, கல்லூரி இறுதி தேர்வுக்கு முதல் நாள் குழு விவாதம் செய்து படிக்கற மாதிரி விவாதிச்சாதான் ஓரளவு முடியும்...
    -ந விச்சு.

    ReplyDelete
  39. ஜெய், விமர்சனம் அருமை!
    உங்களோட திரைப்பட விமர்சன முயற்சி மற்றும் ஆர்வம் பாராட்டுக்குரியது
    இன்று முதல் நாள் "Inception" , இனி மற்ற படங்களின் விமர்சனத்தை வரிசையாக படிக்க ஆர்வமாக உள்ளேன்.
    இந்த பணி தொடர வாழ்த்துக்கள்!
    -ந விச்சு

    ReplyDelete
  40. நேற்று தான் படம் பார்த்துவிட்டு வந்தேன் ஜெய்! இன்னும் பிரமிப்பு விலகலை. இன்னொரு தரம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். அப்போதாவது இந்த மலைப்பு விலகுதான்னு பாப்போம். ஒவ்வொரு பிரேமிலும் நோலனின் புத்திசாலித்தனமும் அவர் எடுத்திருக்கிற சிரத்தையும் தெரியுது.

    மொமெண்டோ படத்தை பத்தி ரொம்ப நாளா கேள்விப்பட்டிருந்தாலும், உங்க பதிவை படிச்சிட்டுத் தான் படம் பாத்தேன். அதுக்கப்பறம் தான் நோலனோட மற்ற படங்களையும் தேடிப் பார்க்க ஆரம்பிச்சேன். Prestige அதுல மறக்கமுடியாத படம். அது எல்லாத்தையும் தூக்கி சாப்ட்டுச்சு இந்த படம். Nolan is the great!

    சீக்கிரம் உங்ககிட்ட இருந்து இந்த படம் பத்தி தொடர் பதிவு எதிர்பார்க்கிறேன். படம் பாத்த எல்லாருக்கும் புரிஞ்சுக்க வசதியா இருக்கும்...

    ReplyDelete
  41. அருமையான படம்... அருமையான விமர்சனம் ஜெய்.. :)

    நோலன் படத்துல ஒரு விஷேஷம் என்னன்னா... கதைய நாம யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம்.... ஆனா படம் பாத்தாங்கன்னா என்னடா இவன் புருடாவுடுறான் அப்டிங்குற அளவுக்கு அவங்களுக்கு ஒரு கத தெரியும்...

    நானும் விமர்சனம் எழுதலாம்-னு இருக்கேன் இந்த படத்துக்கு... எழுதுனவுடனே லிங்க் கொடுக்குறேன்.... படிச்சிட்டு சொல்லுங்க :)

    ReplyDelete
  42. அருமையான விமர்சனம்..கலக்குங்க..!!

    ReplyDelete
  43. விம‌ர்ச‌ன‌ம் அருமை ஜெய். ப‌ட‌த்தை இந்த‌ வார‌ம் பார்த்துடுவேன் :)

    ReplyDelete
  44. Dear Sir

    I am yet to see the picture. But from the review of yours, I think you have not seen the picture THE CELL - a 2000 film directed by an Indian Director Tarsem Singh. If you have not seen this picture kindly see and write a review. Inception is only an extension of the concept of The Cell in an elaborate way. But seeds are already sworn by an Indian in the year 2000

    ReplyDelete
  45. முதல் இரண்டு பந்திகள்தான் வாசித்தேன் ஜேய். மிகுதி படம் பார்த்ததும்!
    பதிவின் நீளத்தை பார்க்க விஷயம் நிறைய இருக்குன்னு நினைக்கின்றேன். கட்டாயம் வருவேன் திரும்பவும்!

    ReplyDelete
  46. நன்றி ந.விச்சு...

    நன்றி பூமி,
    // இன்னும் பிரமிப்பு விலகலை. இன்னொரு தரம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். //
    எனக்கும்தாங்க... ரெண்டு நாளாகியும் வியப்பு குறையல...
    // மொமெண்டோ படத்தை பத்தி ரொம்ப நாளா கேள்விப்பட்டிருந்தாலும், உங்க பதிவை படிச்சிட்டுத் தான் படம் பாத்தேன் //
    இது போதுங்க... இதுதான் எழுதறதுக்கு டானிக்.. நாலு நல்ல படங்களை பல பேரை பார்க்கவைக்கணும்... நன்றி... சந்தோஷம்...

    நன்றி mythoughtsintamil...
    // கதைய நாம யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம்.... ஆனா படம் பாத்தாங்கன்னா என்னடா இவன் புருடாவுடுறான் அப்டிங்குற அளவுக்கு அவங்களுக்கு ஒரு கத தெரியும்... //
    அதேதாங்க... இப்பவும் பலபேர் அப்படிதான் சொல்லறாங்க...

    நன்றி ஜெய்லானி, ரகு, மனோரஞ்சன்...
    கண்டிப்பா படத்தை பாருங்க...

    @ மணியன்,
    நீங்க சொன்னவுடன், தி செல் படத்தின் கதையை தேடி படிச்சென்.. ரெண்டுலயும் கனவுலகத்துக்குள்ள போறாங்க அப்படிங்கிற விஷயத்தைத் தவிர, அதிகம் சம்பந்தமில்லைன்னு நினைக்கிறேன்...
    கடுகும் பூமியும் ஒரே வடிவத்துலதான் இருக்குது... ஆனா எவ்வளவு பெரிய வித்தியாசம்... கண்டிப்பா இன்செப்ஷன் பாருங்க... நான் சொல்லறது புரியும்... :)

    ReplyDelete
  47. நெக்ஸ்ட் வீக்..!! நெக்ஸ்ட் வீக்.. ஒன்லி!! :( :(

    ReplyDelete
  48. ஹாலிவுட் பாலா படம் இன்னும் பாக்கலியா??!! ரெண்டு நாளா இது நிஜ உலகமா இல்ல கனவுலகமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... இப்ப தெளிவாயிடுச்சு... இது கனவுதான்..

    ReplyDelete
  49. உங்கள் கருத்துக்களை மிக அருமையாக மற்றும் எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்

    கண்டிப்பாக பார்த்துருவோம் ( தமிழில் ) :)

    .

    ReplyDelete
  50. ஜெய்... இதோ எனது விமர்சனம்... படிச்சிட்டு சொல்லுங்க...

    http://kanaguonline.wordpress.com/2010/07/20/inception-2010-english/

    ReplyDelete
  51. @ Cibi,
    நன்றி... நிச்சயம் படம் பாருங்க...

    @ கனகு,
    இதோ படிக்கப்போறேன்...

    ReplyDelete
  52. வாவ், சூப்பர். இந்தப் படமாவது பார்க்கணும்.

    ReplyDelete
  53. 18 தேதி இந்த படம் சென்னையில் பார்த்தேன்
    75% சரியாகத்தான் புரிஞ்சிருக்கு எனக்கு

    நல்லா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  54. எல்லா சீனும் கருமமே கண்ணா உக்காந்து பாத்தாதான் படம் புரியும் போல...நல்லா கவனிச்சிருக்கீங்க படத்தை...உங்க விமர்சனம் அருமை..கண்டிப்பா பாத்திடறேன்..

    http://rameshspot.blogspot.com/

    ReplyDelete
  55. உங்க விமர்சனம் அருமை தலைவா. இதபடிக்கும்போது
    படத்தை பார்க்கவேண்டும் என்று ஆவல் இன்னும் அதிகமாக இருக்கு. அருமையான பதிவு.

    ReplyDelete
  56. புத்திசாலித்தனமான சினிமாவின் உச்சகட்டம்...
    //

    தமிழ்ல ஏ.ஆர்முருகதாஸ் எடுக்குறாரா????

    எங்களுக்கு எல்லாம் பாட்டு டான்ஸுன்னு பாத்தாத்தான் பாதையாவது புடிக்கும்...

    கனவுல பாட்டுன்றது கதையோட வருது பாருங்க :-)

    ReplyDelete
  57. http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/08/surya-circus-artist-7-aum-arivu-murugadoss.html

    ReplyDelete
  58. Nice post, the whole movie could be written as a big volumed novel. The viewer has to follow the movie very closely,if u miss a second then ur u'd miss something very important. I liked the black humor in the midst of the movie, eg. when Eames pulls out a grenade launcher saying 'you need to dream big' to Arthur. I was literally on the edge of my seat while watching. The movie lived up to the hype it generated.

    ReplyDelete
  59. அருமையா எழுதியிருக்கீங்க ஜெய்.

    ReplyDelete
  60. This movie is just copy of Matrix. in MAtrix people go into computer, here they go into Mind (dream). perusa onnum vitthyasam theriyavillai. Momento vida for me, MAtrix is best movie, esp the dialogues - omg i saw it four times, each time i came to know new things abt the movie.

    ReplyDelete
  61. ///இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத்தில் என்ன படம் இருந்தாலும் இதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது///

    மெய்யாலுமா? he he he

    ReplyDelete
  62. சாரு நக்கலா சொன்னாரா...நிஜமா சொன்னாரான்னு தெரியல. ஆனா அவர் சுட்டிய பிறகுதான் உங்க வலைப்பதிவை படிச்சேன். நம்மள மாதிரி சாதாரண பட்ட ஆளுங்களுக்கு இந்த மேட்ரிக்ஸ்லாம் புரியவில்லை. ஆனா நீங்க இத்தனை விளக்கமா கதையெல்லாம் சொன்ன பிறகு புரியும்னு நினைக்கிறேன். அதெப்படிங்கன்னா..உங்களுக்கெல்லாம் மட்டும் இந்த மாதிரி படங்களெல்லாம் புரியுது.? ரொம்ப படிச்சவங்க போல..சரி. நான் படம் பார்க்க செல்வேன். நன்றி..

    ReplyDelete
  63. நன்றி ஜெய். சூப்பரா இருக்கு! உங்க review . இததான் முருகதாஸ் சுடப் போறாரா? ஏதோ வேர்ல்ட் சினிமா ல யே வராத கதை ன்னு சொன்னார்... :)

    ReplyDelete
  64. ஜெய்....

    அந்த கருமத்தை படிச்சிட்டு, இந்த ஏரியாவுக்கு ஆளுங்க வருவாங்கன்னு நினைக்கலை.

    தெரிஞ்சிருந்தா.. கார்த்திக்கேயன் ப்லாக் கச்சேரியை இங்க வச்சிருந்திருக்கலாம்.

    ReplyDelete
  65. இந்திய இலக்கியத்தில் அனுபவம் இருப்பவர்களுக்கு, கனவு- கனவுக்குள் என்பது புதுமையாக இருக்காது..

    ஆனாலும் நல்ல முறையில் எடுக்கப்பட்டுள்ள படம்தான்..

    படத்தை விட , உங்கள் விமர்சனம் சூப்பர்...

    உண்மையிலேயே படத்தை புரிந்து கொண்டு எழுதியதில் அசத்தி விட்டீர்கள்..

    ReplyDelete
  66. Where and how did you derive that the US Government is after him for his 'invasive' activity? He is sought after for the 'murder' of his wife.
    Manian was right - the concept was seeded in Jennifer Lopez starrer - Cell. That was promoted as a horror flick and did not get a big reception. More over it was Lopez movie. She can not act.
    This movie expanded the concept and did it with richness and on a major budget. Cell when compared is a low budget movie..

    Wachowski brothers and Nolan had a wonderful graphics team to pull it off for a greater visual impact. Where CELL had to rely on the viewer to imagine.

    It is like comparing Shankar's Sivaji [same old masala concept] movie with old MGR's MalaiKallan.

    After watching the movie, one walks with an empty feeling without a closure - that is one thing that one never enjoys in a Hollywood movie. They always leave an opening for a sequel. That lack of closure is a disappointment for the movie.

    ReplyDelete
  67. உண்மையிலயே நீங்கள்தான் ஆங்கில படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில் கில்லாடி ஜெய். பலபேர் உங்கள் மீது வயிற்றெறிச்சலில் படுகிறார்கள் அதை பற்றி கவலைபடாமல் உங்கள் பணியை தொடருங்கள்.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. One more thing..... I used to browse and read all Tamil blogs.....but never followed any one...I have just followed you and Hollywood Bala...

    While browsing i came across this Charu Niveditha Site ( actually i got this link from Hollywood bala "Swetha" blog... I saw his review on Inception...he hasn't understood what i have understood in the movie.....I saw your reply for his review.....he was unable to digest that you have found mistakes in his review......he has created all sorts of drama...using all bad words as his reply......I browesed more about that guy...he seems to be a guy who always like praising....and he doesn't like criticism.. i felt bad for the reply he has given against you.....i dont think viewers are writing in support for him...he himself writes the question and answers it..
    you have very good knowledge on understanding complicated movies...continue your good work jai..

    Regards
    Raj.K

    ReplyDelete
  70. ஜெய், இந்தப் படத்தோட ராசியோ என்னமோ, படம் பாத்த எல்லாருக்கும் ஏதாவது ஒரு மேட்டர் முழுசா புரியாம கொழப்பிடுது.
    உங்களுக்கும் சில விஷயம் தப்பு தப்பா புரிஞ்சிருக்கு ன்னு தோணுது :)

    ////ஒரு கனவுலகத்தை கம்யூட்டர்லேயே டிஸைன் பண்ணிட்டு////

    ///இது அரசாங்கத்துக்கு தெரிஞ்சு, அவரை கைது செய்ய சொல்லிடறாங்க..///

    //அது கனவுன்னு அவருக்குத் தெரியாம இருக்கறதுக்காக, //


    ///கனவுல இருக்கப்போ எழுப்பிட்டா, கனவு கலைஞ்சு எல்லாம் பாழயிடும்///

    ஹா.பாலா பதிவு வந்தாதான் ஒரு விடுவுவரும் ;)

    ReplyDelete
  71. அப்படியே ஒரு வெளம்பரம் போட்டுக்கறேன். என் இன்செப்ஷன் குழப்பங்கள் இங்கே:
    http://surveysan.blogspot.com/2010/07/inception.html

    ReplyDelete
  72. கருத்து சொன்ன எல்லோருக்கும் நன்றி... :-)

    @ Venky Diary,
    // Where and how did you derive that the US Government is after him for his 'invasive' activity? He is sought after for the 'murder' of his wife. //
    You are right... Cobb is sought for the wife's death and not for his dream thefts... I have earlier mentioned this mistake in my comment above "எனக்குத்தெரிஞ்சவரை, // ஆனா, இது அரசாங்கத்துக்கு தெரிஞ்சு, அவரை கைது செய்ய சொல்லிடறாங்க... // இது டைரக்டா எஙகேயும் சொல்லப்படலை... அவர் மனைவியை அவர்தான் கொன்னதா போலீஸ் நினைக்கிறதா சொல்லறாரு ஹீரோ... "
    Thanks for pointing this again.. :-) This time I will change it in article itself... Keep reading...

    @ Surveysan,
    Good questions... பதில்தான் சொல்லுவேனான்னு தெரியல... :-) எனக்கு புரிஞ்சதை இங்கே சொல்லறேன்... உங்களுக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுங்க... டிச்கஸனை திரும்ப ஆரம்பிச்சுடுவோம்... பாலாவும் பார்த்துட்டாருல்ல... சேர்ந்து கும்மி அடிக்கலாம்...

    ////ஒரு கனவுலகத்தை கம்யூட்டர்லேயே டிஸைன் பண்ணிட்டு///
    அரியாட்னி முதல்ல ஒரு மாடல் டிஸைன் பண்ணறாங்க(பேப்பர்லயோ, அட்டையிலயோ)... அதுக்கப்பறம் குறிப்பிட்ட லெவல் dreamer-க்கு மட்டும் அதை சொல்லறதா சொல்லறாங்க... ஆனா, அவங்க பண்ணற அந்த மாடல் எப்படி கனவுல உருவாகுதுன்னு தெரியலைங்க... மூணாவது லெவலிலே(பனிமலை), ரகசிய வழியை சொல்லும்படி காப் மாலிடம் கேக்கிறான்... dreamer-க்கு மொத்த மாடலும் தெரிஞ்சு இருந்தா அந்த ரகசிய வழியும் Eames(dreamer of 3rd level)-க்கு தெரிஞ்சு இருக்கும்... ஆனா அவருக்கு தெரியாத மாதிரிதான் காண்பிச்சாங்க... அதுனால dreamer-ன் ஞாபகம் மட்டுமில்லாம, வேற ஏதோ ஒரு இடத்துல(சூட்கேஸ்?) டிஸைன் physical-ஆ ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கதாதான் நினைச்சேன்...

    ///இது அரசாங்கத்துக்கு தெரிஞ்சு, அவரை கைது செய்ய சொல்லிடறாங்க..//
    மேல ஏற்கனவே சொல்லியிருக்க மாதிரி இது தப்புதான்... மாத்திடறேன்...

    ///கனவுல இருக்கப்போ எழுப்பிட்டா, கனவு கலைஞ்சு எல்லாம் பாழயிடும்//
    ஒரு லெவல், ரெண்டு லெவல் போறதுக்கு கூட sedative எடுத்துக்கறதாதான் சொல்லறாங்க... பல லெவல் கனவு போறப்போ ஸ்பெஷலா heavy sedative எடுத்துக்கறதா சொல்லறாங்க...(யூசஃப் இடத்தில் முதலில் பேசறப்போ).. அதாவது, இந்த மாதிரி கனவுல போறதுக்கு எப்பவுமே sedative எடுத்துக்கறாங்க... ஏன்னா, ஆக்சுவல் கிக் வர்றவரை எழுந்திருக்கக்கூடாதுன்னுதானே? அந்த வேன்ல போறப்போ கூட, ரெண்டாவது லெவல் போறதுக்கு முன்ன, வண்டியை டிஸ்டர்பன்ஸ் இல்லாம ஓட்ட சொல்லி காப் யூசஃப் கிட்ட சொல்லறதா ஞாபகம்... அதுனால எப்பவும் செடேட்டிவ் எடுத்துக்க காரணம் தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ்னால கனவு கலைஞ்சுடக்கூடாது அப்படிங்கிறதா இருக்கும்னு எழுதி இருக்கேன்...

    //அது கனவுன்னு அவருக்குத் தெரியாம இருக்கறதுக்காக, //
    ஒவ்வொரு லெவல்லயும் ஒரு purpose இருக்குதான்... (முதல் லெவல்ல கிட்னாப்... ரெண்டாவது லெவல்ல காட்ஃபாதரின் துரோகம், மூணாவது லெவல்ல இன்செப்ஷன் அப்படின்னு...) ஆனா, அதுக்கு base-ஏ, முதல் லெவல் கனவு இல்லை நிஜம்னு ஃபிஷர் நம்பணும்... ரெண்டாவதும், மூணாவதும் கனவுன்னு ஃபிஷர்கிட்ட தெளிவா சொல்லறாங்க... அது முடிஞ்சு முதல் லெவல் வர்ற ஃபிஷர் அதுவும் கனவுன்னு தெரியாம, நிஜம்னு நம்பறாரு... அந்த நம்பிக்கைதான் இன்செப்ஷன் நடக்க அடிப்படையே... முதல் லெவல்ல இன்செப்ஷன் பண்ணினா, எழுந்தவுடனே அது கனவுன்னு தெரிஞ்சுடும்... அதுனால, முதல் லெவலை உணமைன்னு நம்ப வச்சு, ரெண்டாவது மூணாவது லெவல்ல வேலையை முடிக்கறாங்க... இல்லையா? இதே டெக்னிக்தானே முதல்முறை சைட்டோவுக்கு இன்செப்ஷன் பண்ணும்போதும் பண்ணறாங்க...? அதைத்தான் சொல்லி இருந்தேன்...
    ஏதாச்சும் வேற மாதிரி தெளிவா இருந்தா சொல்லுங்க சர்வேசன்... கண்டிப்பா மாத்திடுவோம்...

    // ஹா.பாலா பதிவு வந்தாதான் ஒரு விடுவுவரும் ;) //
    ஏற்கனவே நானும் பாலாவுக்கு ஒரு லிஸ்ட் சந்தேகம் அனுப்பி வச்சுருக்கேன்... தல... இதுக்குதான் நீங்க போஸ்ட் போடுங்கன்னு சொல்லிகிட்டு இருக்கேன்... ஸ்வேதாவை நாங்க கண்டுபிடிச்சு தர்றோம்.. ;-)

    // அப்படியே ஒரு வெளம்பரம் போட்டுக்கறேன். //
    தாராளமா... :-) நல்ல விஷயம்... நாலு பேரு படிக்கட்டும்...

    ReplyDelete
  73. @Raj - I ALSO happened to read Charu - I really do not respect that guy and I was so bored to death that I kept following links :(. My bad luck..

    I am amazed that he has such a following and his arrogance and boasting makes one puke. I do not want to make this as a Charu-bashing - I wish I could do that in his site but I do not have the respect to write. Using his phrase - I do not want to become a pig to be in his pigsty.

    Fundamentally he has no clue on what the movie is about. He did not even understand what 'projection' is all about. That was surprising coming from a 'well-read' person.

    Anyway ...

    ReplyDelete
  74. ஜெய், நானும் திரும்பவும் கொழம்பிட்டேன். பாத்த அடுத்த நாளே, பாதி ஞாபகம் இல்லை. இப்ப எதிர் கேள்வி கேட்டீங்கன்னா, அடுத்த ஷோ போய் பாத்துட்டு வந்துதான் சொல்ல முடியும். பாலா பதிவுக்கு வெயிட்டுவோம்.மனுஷன் கோனார் போட்டா நல்லது;)

    ///டிஸைன் physical-ஆ ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கதாதான் நினைச்சேன்...
    ////
    இல்லன்னே நெனைக்கறேன். கனவில் வருவதெல்லாம், மூளையில் ப்ரொஜெக்ஷன்னுதான் கேட்டதா ஞாபகம். ஒவ்வொருவரின் ப்ரொஜெக்ஷனௌம் சேந்துதான், சம்பவங்கள் நடக்குது கனவுல.

    /////அதுனால எப்பவும் செடேட்டிவ் எடுத்துக்க காரணம் தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ்னால கனவு கலைஞ்சுடக்கூடாது//////
    எங்க டமில் வாத்தி சொல்லுவாரு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, நீ படிச்சதெல்லாம் பதிலா சொல்லாதன்னு. :)
    நீங்க சொல்றது சரியாத்தான் படுது.
    :)

    ReplyDelete
  75. இந்த படம் நான் இன்னும் பார்க்கல, ஆனா //இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று..// Memento பார்த்து இருக்கிறேன். Memento பற்றி நீங்க சொன்னத ஏத்துக்க முடியல... The Pursuit of Happyness-ங்கற படத்த நீங்க பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். அந்த படத்தோட திரைக்கதையவிட, Memento வோட கொடுர திரைக்கதை பெரிசுனு நினைக்கிறீங்களா?

    ReplyDelete
  76. ஸார்...

    எழுத்துக்கூட்டி படிக்கிறவனெல்லாம் எழுத்தானா-ன்னு நோபல் ப்ரைஸ் வாங்கின, லத்தீன் இலக்கியத்தை காக்க வந்த பண்ணாடை.., எழுத்தாளர் சர். சாரு கேட்டுட்டாருங்க.

    நாம யாருங்க அதை எதுத்துப் பேச? உங்களுக்கு கெட்ட வார்த்தை பேசத் தெரியுமா? அப்டினா மட்டும் எழுதுங்க.

    தெரியாதுன்னா.... என்னை மாதிரியே.............

    ReplyDelete
  77. //Your comment will be visible after approval.//

    என்னக் கொடுமையிது??

    ReplyDelete
  78. தல... நேத்து யாரோ ப்ரொஃபைல் இல்லாதவங்க அவரை திட்டி இங்க கமெண்ட் போட்டுட்டாங்க... ப்ரொஃபைல் இல்லாதவங்க திட்டினா நானே போட்டுகிட்ட மாதிரி இருக்கும்... அதான் தற்காலிகமா மாடரேஷன் வச்சுருக்கேன்... :-)

    ReplyDelete
  79. //தல... நேத்து யாரோ ப்ரொஃபைல் இல்லாதவங்க அவரை திட்டி இங்க கமெண்ட் போட்டுட்டாங்க... ப்ரொஃபைல் இல்லாதவங்க திட்டினா நானே போட்டுகிட்ட மாதிரி இருக்கும்... அதான் தற்காலிகமா மாடரேஷன் வச்சுருக்கேன்... :-)//
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்னு கேள்விபட்டிருக்கேன். உங்க மேல மரியாதை ஜாஸ்தியாயிடுச்சு. நீங்க எழுத்தாளரோ இல்லையோ, நல்ல மனுஷன். வாழ்த்துக்கள். ஆமா நீங்களாவது எழுத்து முடியுற வரைக்கும் படம் பாத்தீங்களா?

    ReplyDelete
  80. // ஆமா நீங்களாவது எழுத்து முடியுற வரைக்கும் படம் பாத்தீங்களா? //
    இதென்ன புது கதை... அங்க ஒரு ட்விஸ்ட்டு இருந்துச்சுன்னு சொல்லாதீங்க... :-)

    ReplyDelete
  81. உங்கள் விமர்சனம் பற்றிய சாருவின் பதிவு பார்த்தேன். என் விமர்சனத்தை குறை கூற உனக்கென்ன யோக்யதை என்ற ஆணவமே தெரிகிறது. உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உயர்ந்தவர்கள் இல்லை என்று இன்னொருமுறை தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  82. ஜெய்,

    இணைய பிச்சைகாரர்களின் எழுத்தையெல்லாம் பெருசா எடுத்துகாதீங்க தல....

    அது இதுவரைக்கும் எத்தனையோ தடவ அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிக்குது.

    அதையெல்லாம் பொருட்படுத்தாது உங்கள் பாணியில் வழக்கம் போல் எழுதுங்கள்

    :))

    ReplyDelete
  83. பாஸ்.. இன்னும் நான் படத்தை பார்க்கல. எல்லாம் இந்த ராமநாராயணன் பண்ண வேல.

    இதே சாருதான் ஆனந்த் அண்ணாமலை என்பவர் எழுதிய கடிதங்களைக் கொண்டு மலாவி என்றொரு தேசம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். பரவயில்லை..வாசகர்களுக்கும் மதிப்பளித்து..இந்த மாதிரியும் ஒருத்தர் செய்யுறாரே ஆச்சரியப்பட்டேன். ஆனா அவரே இந்த மாதிரி படிக்கிறவர்களையும், சரி நமக்கு தெரியறத அவர்ட்ட பகிர்ந்துக்குவோம் நினைப்பவர்களையும் இப்படி வைய்யுறார் நினைக்க கஷ்டமா இருக்கு. என்னதான் லிபரலான ஆசாமி, பின்-நவீனத்துவவாதி என்று சொன்னாலும், எல்லோர்குள்ளயும் ஈகோ இருப்பது உறுதி. நாளைக்கே அவர பாராட்டி நீங்க ஒரு கமென்ட் போட்டா வெளியிடத்தான் போறார். வேற என்ன சொல்லறதுன்னு தெரியல.

    ReplyDelete
  84. உஜிலாதேவியின் ப்லாகில் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

    http://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_10.html

    ReplyDelete
  85. //தமிழில் எழுத்துக் கூட்டி நாலு வாக்கியம் எழுதத் தெரிகிறதா, உடனே ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு சினிமா விமர்சனமும் எழுதி இங்கே எழுத்தாளன் ஆகி விடலாம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் வெளியில் தெரிய வைக்கவே அந்த லிங்கைக் கொடுத்தேன்//.

    திரு. ஜெய் அவர்களுக்கு..
    உங்களது விமர்சனம் சாரு அவர்களால் குறை கூறப்பட்டுள்ளதை நீங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவர் நித்தியானதவிர்க்கு தூக்கிய சொம்பை கீழே போட்டதில் இருந்து இப்படிதான் யாரையாவது குறைகூறிக் கொண்டிருக்கிறார். விடுங்கள் அகிலனின் சித்திரப்பாவையை குப்பை என்றவர் உங்களுடைய விமர்சனத்தையும் குறைகூறி இருப்பதால் நீங்கள் வருத்தப்பட தேவையில்லை.

    ReplyDelete
  86. முதல் நாள் உங்கள் கடிதம் சாரு-வுக்கு Inception படத்தை பற்றிய அவருடைய தவறான புரிதலை உணர்த்தியது, அதனால் உடனே தான் இனிமேல் திரை பட விமர்சனம் எழுத போவதில்லை என்று எழுதினார் மறுநாள் அவருடைய தாசன்-கள் எப்போதும் போலவே உசுப்பேட்ற, எதோ உங்களை ஏளன படுத்தவே உங்கள் முகவரி-யை கொடுத்ததாக மாற்றி எழுதிவிட்டார். அவருக்கு ஒரு நிலையான மனநிலை கிடையாது.

    சாரு உங்களை குறை கூறினாலும் அவரால் தான் உங்கள் இணைய முகவரி கிடைத்தது ... அதற்காக அவருக்கு ஒரு நன்றி.

    உங்களுடைய The Sixth Sense படத்தை பற்றிய விமர்சனம்(அறிமுகம்) அருமை, திரை கதை பற்றிய மர்மத்தை உடைக்காமல் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  87. உங்கள் பதிவுகள் மிக நன்றாக உள்ளது! இதைப் போல் ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களை விரிவாக படிப்பது மிகவும் பிடித்துள்ளது. நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  88. உங்க கண்ணோட்டம் நல்லாருக்கு தல.
    இன்னும் படம் பாக்கல. imax ல பாக்கணும்னு சனிக்கஜழமை மட்டும் வெயிட்டிங்கு!!!

    ReplyDelete
  89. i want know about this movies and reviews. I've seen this movies. but i couldn't understand it.
    Please can you write for me?

    The Shining[1980], Sin City[2005],Mulholland Dr (2001).

    ReplyDelete
  90. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  91. Dear Jai,

    Very good movie. I saw 3 weeks ago and then come to see your review, and it is very good and answers more doubts. I again went and see the movie twice at satyam. Wanna see again also.

    Have you seen Nolan's the Prestige. If yes then review plssssssssssss....

    Tks in advance.

    ReplyDelete
  92. புதுசா ஏதாச்சும் எழுதிக் கிழிச்சா சொல்லியனுப்புங்க. போரடிக்குது.

    ReplyDelete
  93. ஹலோ.. ஹலோ... இங்க பாப்கார்ன் கிடைக்குமா?

    ReplyDelete
  94. சாருவின் INCEPTION அறிமுகம் படித்துதான் அந்த படத்திற்கு போனேன். ஆனால் நிஜமாகச் சொல்கிறேன் நீங்கள் குறிப்பிட்ட சாருவின் தவறான இடங்களிலெல்லாம் எனக்கு சந்தேகம் வந்தது, அதோடு அவர் கொடுத்த லிங்கிலிருந்து உங்கள் கட்டுரையை படித்த பொழுது எனக்கு புரிதல்களில் நம்பிக்கையும் நல்ல தெளிவும் ஏற்பட்டது. உங்களுடைய கட்டுரையை இது திரைவிமர்சனமே இல்லை என்பவர்கள், முதலில் கதையையும் கதையில் கையாண்டிருக்கும் கருத்தியல்களையும் சரியாக புரிந்து கொள்ளாமல் எப்படி விமர்சனம் எழுத முடியும் என்று நம்புகிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை. உங்கள் கட்டுரை மிக அருமை யாரின் நையாண்டிக்கும் மனம் களங்காமல் சோர்வடையாமல் தொடர்ந்து எழுதுங்கள் என் போன்றவர்களுக்கு உங்கள் அறிமுக கட்டுரைகள் மிக பயனுடையதாக இருக்கிறது.

    மகேஷ்

    ReplyDelete
  95. .............................Ummai pugala varthaigal illai.

    ReplyDelete
  96. என்கிட்ட 2 ப்ளாக்ஸ் இருக்கு... போரடிச்சா வாங்க.. புடிச்சிருந்தா கமென்ட் பண்ணுங்க..
    இல்லைன்னா ப்ரென்ட்ஸாவே இருந்துக்குவோம்..

    கால்பந்தாட்ட செய்திகளுக்கு -
    http://www.sportsjz.blogspot.com

    சினிமா விமர்சனங்களுக்கு -
    http://www.cinemajz.blogspot.com

    ReplyDelete
  97. எண்களில் வாழ்க்கையில்லை எண்ணிப் பார்க்காமலும் வாழ்க்கையில்லை....
    100

    ReplyDelete
  98. //Your comment will be visible after approval.//

    ராசாவே உன்ன காணாத நெஞ்சம் காத்தாடி போலாடுது.

    ஜெய் 27 தமிழ்மணம் வாங்க

    ReplyDelete